சென்னை சுங்க மண்டல முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சுங்க மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 சென்னை சுங்க மண்டல முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் கடந்த ஜன.2ம் தேதி பொறுப்பேற்றுள்ளார். மண்டலிகா ஸ்ரீனிவாஸ் 1988ம் ஆண்டு முதல் இந்திய வருவாய் சேவையில் பணியாற்றி வருகிறார். கடந்த காலங்களில் சுங்கத்துறை, ஜி.எஸ்.டி, உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு மதிப்புமிக்க பொறுப்புகளை வகித்துள்ளார்.

அகில இந்திய தொழிலாளர் தயாரிப்பு  பொருட்களின் மதிப்பீட்டிற்கான குழுவின் உறுப்பினராகவும், அகில இந்திய அதிகபட்ச விற்பனை விலை மதிப்பீடு திருத்த குழுவின் உறுப்பினராகவும், ஜிஎஸ்டி-குழுவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை  இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். தலைமை பண்பு,  நேர்மறையான அணுகுமுறை மற்றும் புதுமையான செயல்பாடு ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர். அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளார்.

எளிதாக வியாபாரம் செய்வது மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குவது முக்கிய குறிக்கோள்களாகும். பொதுமக்கள் குறிப்பாக வர்த்தகர்கள் முதன்மை செயலாளர் அலுவலத்தை [email protected] என்ற மின்னஞ்சில் முலம் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கு தீர்வுகான கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjgwMzjSAQA?oc=5