சென்னை: `நீ ஏன் தற்கொலை செய்கிறாய்; நானே கொலைசெய்கிறேன்!’ – புத்தாண்டில் நடந்த பயங்கரம் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். நந்தகுமாரின் மனைவி பபிதா (31). இவர் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். கடந்த புத்தாண்டு தினத்தன்று நந்தகுமார், நண்பர்களுடன் மது அருந்தியிருக்கிறார். அதனால் கணவன் மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு பபிதா, தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துவிட்டதாக பபிதாவின் குடும்பத்தினருக்கு போனில் நந்தகுமார் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது பபிதா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பபிதாவின் தந்தை கண்ணன், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், “கடந்த 31.12.2022-ம் தேதி மணலியில் உள்ள என்னுடைய வீட்டுக்கு மருமகன் நந்தகுமார், என்னுடைய மகள் பபிதா மற்றும் பேரக்குழந்தைகள் புத்தாண்டு கொண்டாட வந்திருந்தனர். புத்தாண்டு தினத்தன்று என்னுடைய மருமகன் நந்தகுமார், நண்பர்களுடன் காசிமேட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டார். அதனால் அன்றைய தினம் மாலையில் என்னுடைய மகள் பபிதா, பேரக்குழந்தைகளை தண்டையார்பேட்டையில் உள்ள மகளின் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். அதன்பிறகுதான் மருமகன் நந்தகுமார், என்னுடைய மகள் பபிதா, தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனால் மயங்கிவிழுந்து விட்டதாகவும் போனில் தெரிவித்தார். எனவே என்னுடைய மகளின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நந்தகுமார்

அதன்பேரில் போலீஸார், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பபிதாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பபிதாவின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டதே அவரின் மரணத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டது. அதனால் பபிதாவின் கணவர் நந்தகுமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் அவருடன் சம்பவத்தன்று மது அருந்திய நண்பர்களிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது நந்தக்குமார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் பபிதாவை நந்தகுமார் கொலைசெய்தது தெரியவந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLXlvdW5nc3Rlci13aG8ta2lsbGVkLWhpcy13aWZlLTLSAVxodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9wb2xpY2UtYXJyZXN0ZWQteW91bmdzdGVyLXdoby1raWxsZWQtaGlzLXdpZmUtMg?oc=5