நானே ஓசியில் குடிச்சிட்டு வருகிறேன்…! அபாரதம் கட்டமுடியாது போதையில் சென்னை பெண் அடாவடி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னையில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளம்பெண் தன்னை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சைதாப்பேட்டை வழியாகத் தள்ளாடியபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தியபோது அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்தது.

வேளச்சேரியைச் சேர்ந்த மீனா என்ற அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். தானே ஓசியில் குடித்துவிட்டு வருவதால் அபாரத தொகையையெல்லாம் செலுத்தமுடியாது என கத்தி ரகளை செய்த மீனா, தினமும் குடித்துவிட்டுதான் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்பெண்ணின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார், அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiggFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvaS1hbS1nZXR0aW5nLWRydW5rLWluLW9jLW15c2VsZi11bmFibGUtdG8tcGF5LXRoZS1maW5lLXRoZS1kcnVua2VuLXdvbWFuLWlzLWFidXNpdmUtODcyNjM50gGGAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvaS1hbS1nZXR0aW5nLWRydW5rLWluLW9jLW15c2VsZi11bmFibGUtdG8tcGF5LXRoZS1maW5lLXRoZS1kcnVua2VuLXdvbWFuLWlzLWFidXNpdmUtODcyNjM5?oc=5