”வித்தியாசமான அரசியல்சூழல்.. தமிழ்நாடு வேண்டாம்.. தமிழகம் ஓகே” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழ்நாடு மட்டும் அதை வேண்டாம் என எதிர்ப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏற்பாடுகளை செய்தோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டினார். பிரதமர் மோடியின் சிந்தனையால், காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடத்தப்பட்டதாகவும், மிக குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் புகழாரம் சூட்டினார். மேலும் ஒரே பாரதம் தான் அதில் நாம் எல்லோரும் அங்கம். அந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும்  ஆனது என “செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள் ”  என்ற பாரதியாரின் பாடலை மேற்கொள் காட்டி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.

மேலும் இப்பொழுது எல்லாம் பலர் பாரதத்தை பற்றி பேசுவது கிடையாது அதில் அவர்களின் குறை ஒன்றும் இல்லை. பாரத் (பாரதம்) என்பதை உடைப்பதற்கு, அழிப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றது ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்தனர் என குறிப்பிட்டார். ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் இன்றளவும் (colonizers mentality) காலனி ஆதிக்கம் மனப்பான்மையிலேயே, தாழ்வு மன நிலையிலேயே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆங்கிலேயர் இந்த மண்ணை ஆட்சி செய்திருக்காவிடில் இந்தியாவிலும் தமிழகத்திலும் பலர் கல்வி கற்றிருக்க முடியாது என்று ஒருவர் பேசியதை செய்தித்தாளில் படித்தேன் இவ்வாறு பேசுபவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என கூறிய அவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரம்மிக்க வைக்கிறது என தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

பின்னர் தமிழ்நாடு குறித்து பேசிய அவர், தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்த உலகத்தை வழி நடத்தும் பொறுப்பில் இந்தியா இருக்கும் எனவும் ஆளுநர் ரவி நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர் : வினோத் கண்ணன் (சென்னை)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL2l0LXNob3VsZC1iZS1jYWxsZWQtdGhhbWl6aGFnYW0taW5zdGVhZC1vZi1jYWxsaW5nLWl0LXRhbWlsLW5hZHUtc2F5cy1nb3Zlcm5lci1ybi1yYXZpLTg2NzUxMy5odG1s0gGMAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL2l0LXNob3VsZC1iZS1jYWxsZWQtdGhhbWl6aGFnYW0taW5zdGVhZC1vZi1jYWxsaW5nLWl0LXRhbWlsLW5hZHUtc2F5cy1nb3Zlcm5lci1ybi1yYXZpLTg2NzUxMy5odG1s?oc=5