சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது! – தினமணி

சென்னைச் செய்திகள்

அரங்குகளைப் பார்வையிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நந்தனத்தில் ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். ஜன. 22-ம் தேதி வரை நடைபெற புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.

தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) சாா்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான 46-ஆவது சென்னை சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஜன. 22-ம் தேதி வரை மொத்தம் 17 நாள்கள் நடைபெறவுள்ளது. 

கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கூடுதலாக 200 சோ்த்து மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சி தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

சிறப்பு ஏற்பாடுகள்:

இந்த முறை வாகன நிறுத்தம், தொலைத்தொடா்பு வசதிகள் மேம்பாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWWh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDYvY2hlbm5haS1ib29rLWZhaXItaGFzLXN0YXJ0ZWQtMzk3OTc2My5odG1s0gFWaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDYvY2hlbm5haS1ib29rLWZhaXItaGFzLXN0YXJ0ZWQtMzk3OTc2My5hbXA?oc=5