சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

காரைக்கால்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் நேற்று அரசு முறை பயணமாக காரைக்கால் வந்தார். அவரை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர் ஆதர்ஷ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேரு வீதியில் அமைந்துள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி இளந்திரையன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ., துணை கலெக்டர் ஆதர்ஷ், புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார் மற்றும் காரைக்கால் மாவட்ட நீதிபதி அல்லி, அரசு வக்கீல்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அரசு விளையாட்டு அரங்கம் அருகே புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே பழைய கோர்ட்டு கட்டிடத்தை சொந்தக் கட்டிடம் இல்லாத அரசு துறைகளுக்கு ஒதுக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vbmV3cy9wdWR1Y2hlcnJ5L2NoZW5uYWktaGlnaC1jb3VydC1qdWRnZS1zdHVkeS04NzM3NTjSAVZodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9uZXdzL3B1ZHVjaGVycnkvY2hlbm5haS1oaWdoLWNvdXJ0LWp1ZGdlLXN0dWR5LTg3Mzc1OA?oc=5