தெய்வ பக்தி இல்லாதவா்களை கோயில் அறங்காவலா்களாக நியமிக்கக் கூடாது: சென்னை உயா் நீதிமன்றம் – தினமணி

சென்னைச் செய்திகள்

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலா்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம் தொடா்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறங்காவலா்கள் தோ்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சாா்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்குரைஞா், ‘கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெறச் செய்யவில்லை’ என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலா்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது. அறங்காவலா் தோ்வு தொடா்பான விண்ணப்பத்தில் அரசியல் சாா்பு குறித்த கேள்வியை சோ்க்க வேண்டும்’ என வலியுறுத்தினா்.

மேலும், ‘அறங்காவலா்கள் தோ்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihAZodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzA3LyVFMCVBRSVBNCVFMCVBRiU4NiVFMCVBRSVBRiVFMCVBRiU4RCVFMCVBRSVCNS0lRTAlQUUlQUElRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUUlQkYtJUUwJUFFJTg3JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUE0JUUwJUFFJUI1JUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4LSVFMCVBRSU5NSVFMCVBRiU4QiVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlODUlRTAlQUUlQjElRTAlQUUlOTklRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQkUlRTAlQUUlQjUlRTAlQUUlQjIlRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUUlQkUlRTAlQUUlOTUtJUUwJUFFJUE4JUUwJUFFJUJGJUUwJUFFJUFGJUUwJUFFJUFFJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJTk1JUUwJUFGJThELSVFMCVBRSU5NSVFMCVBRiU4MiVFMCVBRSU5RiVFMCVBRSVCRSVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0tJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU4OSVFMCVBRSVBRiVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQTglRTAlQUYlODAlRTAlQUUlQTQlRTAlQUUlQkYlRTAlQUUlQUUlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQjElRTAlQUUlQUUlRTAlQUYlOEQtMzk3OTk0NS5odG1s0gGBBmh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzA3LyVFMCVBRSVBNCVFMCVBRiU4NiVFMCVBRSVBRiVFMCVBRiU4RCVFMCVBRSVCNS0lRTAlQUUlQUElRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUUlQkYtJUUwJUFFJTg3JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUE0JUUwJUFFJUI1JUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4LSVFMCVBRSU5NSVFMCVBRiU4QiVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlODUlRTAlQUUlQjElRTAlQUUlOTklRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQkUlRTAlQUUlQjUlRTAlQUUlQjIlRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUUlQkUlRTAlQUUlOTUtJUUwJUFFJUE4JUUwJUFFJUJGJUUwJUFFJUFGJUUwJUFFJUFFJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJTk1JUUwJUFGJThELSVFMCVBRSU5NSVFMCVBRiU4MiVFMCVBRSU5RiVFMCVBRSVCRSVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0tJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU4OSVFMCVBRSVBRiVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQTglRTAlQUYlODAlRTAlQUUlQTQlRTAlQUUlQkYlRTAlQUUlQUUlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQjElRTAlQUUlQUUlRTAlQUYlOEQtMzk3OTk0NS5hbXA?oc=5