பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன் அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். மேலும் அறங்காவலர் தேர்வுக்காக மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg4NzjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODg3OC9hbXA?oc=5