பாமக நிர்வாகியை கத்தியை காட்டி மிரட்டியதாக புகார் : அதிமுக நிர்வாகி கைது! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தண்டல் பணம் செலுத்ததால் பாமக நிர்வாகியை கத்தியை காட்டி மிரட்டிய புகாரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலிகிராமம் தசரதபுரம் காவேரிரங்கன் தெருவில் அமைந்துள்ள எல்.கே.வி ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஞானசேகர். இவர் பாமக கட்சியின் 127 வட்ட துணை செயலாளராக உள்ளார். இவரை அதிமுக பிரமுகர் வெங்கடேசனிடம் வாங்கிய பண விவகாரம் தொடர்பாக கத்திய காட்டி மிரட்டியதாக புகார் அளித்தார். அதில் அதிமுக பிரமுகர்  வெங்கடேசனிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக தண்டலுக்கு பணம் வாங்கியாதகவும், அதனை தொடர்ந்து வட்டியுடன்  நாள்தோறும் கட்டி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த புகாரில், “கடந்த 29  ஆம் தேதி ஞானசேகரன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதால் தினந்தோறும் செலுத்த வேண்டிய தொகையான 200 வீதம் 7 நாட்களுக்கு என ரூ.1400 செலுத்தாமல் இருந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன்  தனது செல்போனுக்கு பணத்தை கட்டமுடியுமா? முடியாதா? எனக்கேட்டு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

மேலும் நேற்று காலை இருவருடன் கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாகவும், அப்போது அருகில் கடையில் இருந்த வியபாரிகள் ஒன்றுக்கூடி சத்தம் போடவே அங்கிருந்து தப்பி சென்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து வீடியோ ஆதாரங்களோடு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதிமுக நிர்வாகி வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvYWlhZG1rLXBlcnNvbi1hcnJlc3RlZC1mb3ItdGhyZWF0ZW5pbmctcG1rLXBlcnNvbi04Njg5NjkuaHRtbNIBZ2h0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL2FpYWRtay1wZXJzb24tYXJyZXN0ZWQtZm9yLXRocmVhdGVuaW5nLXBtay1wZXJzb24tODY4OTY5Lmh0bWw?oc=5