18 மாத குழந்தையின் உறுப்புகள் தானம்…! இறந்தும் 2 பேருக்கு மறுவாழ்வு தந்த குழந்தை…! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த குழந்தை இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இந்நிலையில், அந்த குழந்தை உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என அவர்கள் தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டு அந்த உறுப்புகள் தேவைப்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது. குறிப்பாக கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன. இந்த குழந்தை தான் இதுவரை மாநிலத்திலேயே உடல் உறுப்பு தானம் செய்த மிக குறைந்த வயதிலான குழந்தை ஆகும்.

தமிழ்நாட்டில் 2010ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 52 குழந்தைகள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். தற்போது 103 குழந்தைகள் இதயம், சிறுநீரகம், கல்லீரல் என பல்வேறு உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiemh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvb25lLWFuZC1oYWxmLWFnZS1iYWJ5LW9yZ2FuLWRvbmF0aW9uLXNoZS1zYXZlZC0yLXBlcnNvbnMtbGlmZS1pbi1jaGVubmFpLTg2ODk3MC5odG1s0gF-aHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2NoZW5uYWkvb25lLWFuZC1oYWxmLWFnZS1iYWJ5LW9yZ2FuLWRvbmF0aW9uLXNoZS1zYXZlZC0yLXBlcnNvbnMtbGlmZS1pbi1jaGVubmFpLTg2ODk3MC5odG1s?oc=5