இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து… சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இன்று போதிய பயணிகள் இல்லாமல், சென்னை – மதுரை – சென்னை மற்றும் சென்னை – கர்னூல் – சென்னை இடையே, இயக்கப்படும் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று பகல் 1:10 மணிக்கு புறப்பட்டு, ஆந்திர மாநிலம் கர்னூல் விமான நிலையத்திற்கு பிற்பகல் 2:25 மணிக்கு, செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதைபோல் இன்று மாலை 5:10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் ஆந்திர மாநிலம் கர்னூல் கர்னூலில் இன்று மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:20 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதைப்போல் இன்று இரவு 7 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்பட்டு, இரவு 8:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvNC1mbGlnaHRzLWNhbmNlbGxlZC1pbi1jaGVubmFpLWRvbWVzdGljLWFpcnBvcnQtODY5MzMwLmh0bWzSAWVodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS80LWZsaWdodHMtY2FuY2VsbGVkLWluLWNoZW5uYWktZG9tZXN0aWMtYWlycG9ydC04NjkzMzAuaHRtbA?oc=5