பொங்கல் பண்டிகை: 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப் படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

15.1.2023ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை 12.01.2023 முதல் 14.1.2023 ஆகிய மூன்று நாள்களுக்கு இயக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கேகேநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiggFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzExL3BvbmdhbC1mZXN0aXZhbC1zcGVjaWFsLWJ1c2VzLWFyZS1hbm5vdW5jZWQtMzk4MjQ1Ni5odG1s0gF_aHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMy9qYW4vMTEvcG9uZ2FsLWZlc3RpdmFsLXNwZWNpYWwtYnVzZXMtYXJlLWFubm91bmNlZC0zOTgyNDU2LmFtcA?oc=5