சென்னை மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி: ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163 கோடியில் ஒப்பந்தம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம்-2 ல் வழித்தடங்கள்-3 மற்றும் 5-ல் 60 கிலோ 1080 எச்.எச். தரத்தில் தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானில் உள்ள ‘எம்.எஸ் மிட்சுயி அன்ட் கோ’ நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கி உள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் த.அர்ச்சுனன் (திட்டங்கள்), ஜப்பான் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் ஹாஜிம் மியாகே ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர்கள் எஸ்.அசோக்குமார் (தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு) மற்றும் ஜப்பான் நிறுவனத்தை சேர்ந்த அமித் டாண்டன், எஸ்.கே.பான் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வழித்தடங்களில் அமைக்கப்பட வேண்டிய தண்டவாளங்களின் மொத்த அளவு 13 ஆயிரத்து 885 மெட்ரிக் டன் ஆகும். சோதனை நடைமுறையுடன் கூடிய தண்டவாளங்களின் உற்பத்தி ஏப்ரல் 2023 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் 3 அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தண்டவாளங்கள் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் -2 ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சி.எம்.டி.ஏ. வரை பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigAFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvY2hlbm5haS1tZXRyby1yYWlsLXRyYWNrLWNvbnN0cnVjdGlvbi1ycy0xNjMtY3JvcmUtY29udHJhY3Qtd2l0aC1qYXBhbmVzZS1jb21wYW55LTg3NzI5NtIBhAFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL2NoZW5uYWktbWV0cm8tcmFpbC10cmFjay1jb25zdHJ1Y3Rpb24tcnMtMTYzLWNyb3JlLWNvbnRyYWN0LXdpdGgtamFwYW5lc2UtY29tcGFueS04NzcyOTY?oc=5