சென்னை: பாலியல் வழக்கு; ஆறுமாதங்கள் தலைமறைவு – போலீஸ் எஸ்.ஐ கொல்கத்தாவில் சிக்கிய பின்னணி – Vikatan

சென்னைச் செய்திகள்

கோவையைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `சென்னை பரங்கிமலையில் உள்ள மோட்டார் வாகன பராமரிப்பு பிரிவில் எஸ்.ஐ-யாக பணியாற்றும் ஆண்ட்ரூஸ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. தற்போது ஆண்ட்ரூஸ், என்னை ஏமாற்றிவிட்டார். அதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆண்ட்ரூஸிக்கு சப்போர்ட்டாக அவரின் நண்பரான முன்னாள் ராணுவ வீரர் சுந்தர்ராஜ் உள்ளார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் பள்ளிக்கரணை போலீஸார் முன்னாள் ராணுவ வீரர் சுந்தர்ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

பாலியல் தொல்லை

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சமூகசேவகி, போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தார். முன்னதாக போலீஸ் எஸ்.ஐ, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். முன்ஜாமீன் கிடைக்காதததால் போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸ், சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்தச்சூழலில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஜோஸ்தங்கையா மேற்பார்வையில் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருக்கும் போலீஸ் எஸ்.ஐ ஆண்ட்ரூஸை தேடிவந்தனர். இந்தச் சமயத்தில் அவரின் செல்போன் சிக்னல் கொல்கத்தாவில் காட்டியது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvY2hlbm5haS1wb2xpY2Utc2ktYXJyZXN0ZWQtaW4tc2V4dWFsLWFidXNlLWNhc2UtaW4ta29sa2F0dGHSAWhodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9jaGVubmFpLXBvbGljZS1zaS1hcnJlc3RlZC1pbi1zZXh1YWwtYWJ1c2UtY2FzZS1pbi1rb2xrYXR0YQ?oc=5