உஷார்.. சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளை இடிக்க உத்தரவு..! – BhoomiToday

சென்னைச் செய்திகள்

சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளின் அடுக்கு மாடி வீடுகளை இடிக்கக் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடு பாதை திறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் விமான நிலையத்தின் அருகில் உள்ள கொளப்பாக்கம் பகுதியில் உள்ள 140 கட்டிடங்களின் உயரம் விமான தரையிறங்கத் தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த கட்டிடங்களை இடித்து உயரத்தைக் குறைக்கவும் விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பே இந்த பகுதிகளில் கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அனுமதியுடன் 30 மீட்டர் உயரம் வரை உள்ளது.

ஆனால் அவை 20 மீட்டர் உயரம் வரையில் மட்டுமே இருக்க வேண்டும் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYWh0dHBzOi8vd3d3LmJob29taXRvZGF5LmNvbS9hYWktc2VudC1ub3RpY2UtdG8tZGVtb2xpc2gtdG9wLWZsb29yLW9mLWhvdXNlcy1uZWFyLWNoZW5uYWktYWlycG9ydC_SAWFodHRwczovL3d3dy5iaG9vbWl0b2RheS5jb20vYWFpLXNlbnQtbm90aWNlLXRvLWRlbW9saXNoLXRvcC1mbG9vci1vZi1ob3VzZXMtbmVhci1jaGVubmFpLWFpcnBvcnQv?oc=5