சென்னை சுகாதாரத் துறையில் பல்வேறு காலி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை, மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), பல்வேறு காலியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுளளது.

விவரங்கள் பின்வருமாறு: 

பதவியின் பெயர் காலி இடங்கள் சம்பளம் கல்வித் தகுதி
மாவட்ட PPM ஒருக்கிணைப்பாளர் 01 ரூ.26,500 MSW/M.Sc உளவியம் -முதுநிலை பட்டம்தொடர்புதுறை/ACSM/பொது மற்றும் தனியார் பங்களிப்பு/சுகாதார திட்டங்களில் ஒரு வருடம் பணி ஆற்றிய அனுபவம்3 நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்
புள்ளிவிவர உதவியாளர் – DEO (நோடல் DRTB மையம்)  01 ரூ.26,000 புள்ளியியலில் இளங்கலை பட்டம் மற்றும் அரசு தொழில் நுட்ப கல்வி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயன்பாட்டில் பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையானது,தமிழ் (ம)ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சுசெய்யும் ஆற்றல்MS Word, Excel, கணக்கியல் மென்பொருள் பயன்படுத்துதலை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்
முதுநிலை சிகிச்சை மேற்பார்கையாளர் 04 ரூ.19,800 அறிவியலில் இளங்கலை அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்டசுகாதார ஆய்வாளர் படிப்புMS Office பயன்படுத்துததில் கணிணி சான்றிதழ்நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்
கணினி இயக்குபவர் 01 ரூ.13,500 10+2, (ம)தொழில் நுட்பகல்வி உரிமம் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினியன்பாட்டில் பட்டயம் (DCA)தமிழ் (ம) ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சுசெய்யும் ஆற்றல் 
ஆய்வக தொழில் நுட்ப  வல்லுனர் 52 ரூ. 13,000 10, +2 தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 வருட மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவல்லுனர் பட்டயம்
TB சுகாதாரப் பார்வையாளர். (TBHV) 08 ரூ.13,300 அறிவியலில் இளங்கலைஅல்லது அறிவியல் பாடத்துடன் (10,+2) தேர்ச்சி மற்றும்2 வருட BO MPHW/LHV/ANM/ சுகாதார பணியாளர் பிடிப்பு  அல்லதுஅரசு அங்கீகரிக்கப்பட்ட காசநோய் சுகாதார பார்வையாளர் படிப்புMS Office பயன்படுத்துததில் கணிணி சான்றிதழ்
மருத்துவ அலுவலர் (DTC) 03 ரூ.60,000 இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில்எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மருத்துவ அலுவலர் (மருத்துவக் கல்லூரி) 01 ரூ.60,000 இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 
முதுநிலை மருத்துவ  அலுவலர் Center)(DRTB) 01 ரூ.60,000 இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 
ஆற்றுப்படுத்துநர் 2 ரூ. 13,000 சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல் இளங்கலை பட்டம்அடிப்படை கணினி அறிவு

இந்தப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர் ஒப்பந்த அடிப்படையில்  11 மாதங்களுக்கு பணியமர்த்தப்படுவர். இந்த பணியிடங்கள் இன சுழற்சி பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும்.

விண்ணப்பங்கள் தகுதி மற்றும் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்படுவர் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்த காலி பணியிடங்கள் இன சுழற்சி பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும். நேர்காணலில் கலந்துக்கொள்வதற்கு TA/DA வழங்கப்பட மாட்டாது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு தேவையான ஆவணங்களின் சுய கையொப்பமிட்ட நகல்களுடன் திட்ட அலுவகர், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம் எண் 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600 012 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 23.01.2023 அன்று பிற்பகல் 5 மணிக்குள்  வரை அனுப்பலாம். கடைசி தேதி மற்றும் நேரத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiowFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9lbXBsb3ltZW50L2dvdmVybm1lbnQtam9icy1ncmVhdGVyLWNoZW5uYWktY29ycG9yYXRpb24tZGlzdHJpY3QtaGVhbHRoLXNvY2lldHktcmVjcnVpdG1lbnQtZm9yLXZhcmlvdXMtcG9zdC1jaGVjay1kZXRhaWxzLTg3MzY3Ny5odG1s0gGnAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9lbXBsb3ltZW50L2dvdmVybm1lbnQtam9icy1ncmVhdGVyLWNoZW5uYWktY29ycG9yYXRpb24tZGlzdHJpY3QtaGVhbHRoLXNvY2lldHktcmVjcnVpdG1lbnQtZm9yLXZhcmlvdXMtcG9zdC1jaGVjay1kZXRhaWxzLTg3MzY3Ny5odG1s?oc=5