சென்னையில் சேகுவேராவின் மகள் – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா இன்று (ஜன.17) சென்னை வந்தார். அவரை நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமானநிலையத்தில் வரவேற்றனர்.

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலைடா குவேரா, அவரது மகள் பேரா. எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரளாவின் முன்னாள் அமைச்சருமான எம்.ஏ.பேபி வந்தார். 

 

இவர்களை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஏ.ஆறுமுகநயினார், பா.ஜான்சிராணி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.

 

 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUGh0dHBzOi8vd3d3Lm5ha2toZWVyYW4uaW4vMjQtYnktNy1uZXdzL3RoYW1pemhhZ2FtL2NoZS1ndWV2YXJhcy1kYXVnaHRlci1jaGVubmFp0gFUaHR0cHM6Ly93d3cubmFra2hlZXJhbi5pbi8yNC1ieS03LW5ld3MvdGhhbWl6aGFnYW0vY2hlLWd1ZXZhcmFzLWRhdWdodGVyLWNoZW5uYWk_YW1w?oc=5