சென்னையில் சேகுவேரா மகளுக்கு உற்சாக வரவேற்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் திரண்டனர் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

கியூபா நாட்டின் புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அலைடா குவேராவுடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, எஸ்டெபானி குவேரா ஆகியோரும் வந்தனர். அவர்களை மூத்த நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுந்தரராஜன், வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL21hcnhpc3QtY29tbXVuaXN0LXZvbHVudGVlcnMtd2VsY29tZS10by1jaGUtZ3VldmFyYS1kYXVnaHRlci1pbi1jaGVubmFpLTU2MTYzNdIBeWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS9tYXJ4aXN0LWNvbW11bmlzdC12b2x1bnRlZXJzLXdlbGNvbWUtdG8tY2hlLWd1ZXZhcmEtZGF1Z2h0ZXItaW4tY2hlbm5haS01NjE2MzU?oc=5