சென்னை சர்வதேச புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கிவைத்தார் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கிவைத்தார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சர்வதேச புத்தகக் காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜன. 16) தொடக்கிவைத்தார். 

ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் பல்வேறு நாட்டினர் கலந்துகொள்கின்றனர். சர்வதேச அளவிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழாண்டு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் அதிகாரிகள் பாலரும் கலந்து கொண்டனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYGh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMTYvY2hlbm5haS1pbnRlcm5hdGlvbmFsLWJvb2stZmFpci0yMDIzLTM5ODQ4MDguaHRtbNIBXWh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzE2L2NoZW5uYWktaW50ZXJuYXRpb25hbC1ib29rLWZhaXItMjAyMy0zOTg0ODA4LmFtcA?oc=5