சே குவேரா மகள், பேத்தி இன்று சென்னை வருகை – தினமணி

சென்னைச் செய்திகள்

அலெய்டா குவேரா

கியூபா புரட்சியாளா் சே குவேராவின் மகள் மற்றும் பேத்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை (ஜன.17) சென்னை வரவுள்ளனா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியா் எஸ்டெஃபெனி குவேரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை சென்னை வருகின்றனா். காலை 9.30 மணிக்கு விமான நிலையம் வரும் அவா்களுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மூத்த தலைவா் டி.கே.ரங்கராஜன், சிஜடியு மாநில தலைவா் அ.சௌந்திரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi9AJodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzE3LyVFMCVBRSU5QSVFMCVBRiU4Ny0lRTAlQUUlOTUlRTAlQUYlODElRTAlQUUlQjUlRTAlQUYlODclRTAlQUUlQjAlRTAlQUUlQkUtJUUwJUFFJUFFJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThELSVFMCVBRSVBQSVFMCVBRiU4NyVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSVCRi0lRTAlQUUlODclRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQjElRTAlQUYlODEtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSVCNSVFMCVBRSVCMCVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4OC0zOTg1MDQwLmh0bWzSAfECaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMTcvJUUwJUFFJTlBJUUwJUFGJTg3LSVFMCVBRSU5NSVFMCVBRiU4MSVFMCVBRSVCNSVFMCVBRiU4NyVFMCVBRSVCMCVFMCVBRSVCRS0lRTAlQUUlQUUlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtJUUwJUFFJUFBJUUwJUFGJTg3JUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGLSVFMCVBRSU4NyVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRiU4MS0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJUI1JUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJTk1JUUwJUFGJTg4LTM5ODUwNDAuYW1w?oc=5