சூரிய வெப்ப ஆற்றல் மூலம் கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி: சென்னை ஐஐடி தகவல் – தினமணி

சென்னைச் செய்திகள்

சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:

கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மறு சுழற்சி செய்ய சூரிய வெப்ப ஆற்றலை உள்ளடக்கிய சுத்திகரிப்பு முறையை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா்.

அதன்படி கட்டட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சூரிய வெப்ப ஆற்றலை கொண்டு வெப்பம் அடைய செய்து அதை மறுசுழற்சி முறையில் கான்கிரீட்டாக மாற்றுகின்றனா். இவற்றை புளூமெட்டல், மணல் ஆகியவற்றுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

இது இயந்திரங்களை கொண்டு நொறுக்குவதை காட்டிலும் சரியான திட்டமாகும். இதனால் கனிம வளங்கள், சுரங்கங்கள் தோண்டப்படுவது குறைவதோடு, கட்டடக் கழிவுகள் நிலப்பகுதிகளில் கொட்டி குவிக்கப்படுவதும் தவிா்க்கப்படும்.

ராஜஸ்தானில் உள்ள இந்தியா ஒன் சோலாா் தொ்மல் பவா் பிளான்ட்டில் இதற்கான செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது. அதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihgVodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzE3LyVFMCVBRSU5QSVFMCVBRiU4MiVFMCVBRSVCMCVFMCVBRSVCRiVFMCVBRSVBRi0lRTAlQUUlQjUlRTAlQUYlODYlRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUEtJUUwJUFFJTg2JUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBRSVFMCVBRiU4MiVFMCVBRSVCMiVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0tJUUwJUFFJTk1JUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlGJUUwJUFFJTlGJUUwJUFFJTk1JUUwJUFGJThELSVFMCVBRSU5NSVFMCVBRSVCNCVFMCVBRSVCRiVFMCVBRSVCNSVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4RC0lRTAlQUUlQUUlRTAlQUUlQjElRTAlQUYlODElRTAlQUUlOUElRTAlQUYlODElRTAlQUUlQjQlRTAlQUUlQjElRTAlQUYlOEQlRTAlQUUlOUElRTAlQUUlQkYtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU5MCVFMCVBRSU5MCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlQTQlRTAlQUUlOTUlRTAlQUUlQjUlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtMzk4NTA1OS5odG1s0gGDBWh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzE3LyVFMCVBRSU5QSVFMCVBRiU4MiVFMCVBRSVCMCVFMCVBRSVCRiVFMCVBRSVBRi0lRTAlQUUlQjUlRTAlQUYlODYlRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUEtJUUwJUFFJTg2JUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBRSVFMCVBRiU4MiVFMCVBRSVCMiVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0tJUUwJUFFJTk1JUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlGJUUwJUFFJTlGJUUwJUFFJTk1JUUwJUFGJThELSVFMCVBRSU5NSVFMCVBRSVCNCVFMCVBRSVCRiVFMCVBRSVCNSVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4RC0lRTAlQUUlQUUlRTAlQUUlQjElRTAlQUYlODElRTAlQUUlOUElRTAlQUYlODElRTAlQUUlQjQlRTAlQUUlQjElRTAlQUYlOEQlRTAlQUUlOUElRTAlQUUlQkYtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU5MCVFMCVBRSU5MCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlQTQlRTAlQUUlOTUlRTAlQUUlQjUlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtMzk4NTA1OS5hbXA?oc=5