வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அல்லது பெஞ்ச் புதுச்சேரியில் அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசியவதாவது: புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களில் 5ஜி சேவையுடன் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். கீழமை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அல்லது பெஞ்ச் புதுச்சேரியில் அமைக்கப்படும். முழுமையான உயர்நீதிமன்றம் போல் புதுச்சேரி நீதிமன்ற வளாகம் காட்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சாமி தரிசனம்:
இதற்கிடையே, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவருக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் கோயில் சார்பில் நினைவு பரிசு வழங்கினார்.

ராமர் சேது பாலம் நினைவு சின்னமா?: மத்திய அரசு பரிசீலனை(19)

பா.ஜ., அரசு வளர்ச்சிக்கான அரசு: பிரதமர் மோடி(1)
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjE0NDDSAQA?oc=5