காடு வளர்ப்பு திட்டத்தை பார்வையிட்ட சென்னை கல்லூரி மாணவிகள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

புதுச்சேரி

புதுவை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகர்ப்புற காடு வளர்ப்பு மற்றும் பசுமை வளாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு அரியவகை மரங்கள், செடி, கொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முயல், வாத்து, புறா போன்றவையும் இயற்கை சூழலுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட சென்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் கல்லூரி மாணவிகள் துணை முதல்வர் வனிதா தலைமையில் வந்தனர். அவர்களுக்கு நகரப்புற காடு வளர்ப்பு மற்றும் பசுமை வளாக திட்டம் குறித்து கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் விளக்கி கூறினார்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vbmV3cy9wdWR1Y2hlcnJ5L2NoZW5uYWktY29sbGVnZS1zdHVkZW50cy12aXNpdGVkLXRoZS1hZmZvcmVzdGF0aW9uLXByb2plY3QtODgxODAz0gFyaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvbmV3cy9wdWR1Y2hlcnJ5L2NoZW5uYWktY29sbGVnZS1zdHVkZW50cy12aXNpdGVkLXRoZS1hZmZvcmVzdGF0aW9uLXByb2plY3QtODgxODAz?oc=5