சென்னை அடையாறில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 147 பவுன் நகைகள் கொள்ளை: கொள்ளையர் … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை அடையாறில் தீ விபத்துஏற்பட்ட வீட்டிலிருந்து 147 பவுன்நகைகள் கொள்ளை போனது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடையாறு, காந்தி நகர், 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர்முகிலன் (35). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். அண்மையில் இவர் தனது குழந்தைகளை சொந்த ஊரான சேலத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு கடந்த 13-ம் தேதி மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரது பூட்டியவீட்டில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடம்விரைந்த தீயணைப்பு படைவீரர்கள் கதவை உடைத்துவீட்டுக்குள் நுழைந்து தண்ணீரைபீச்சி அடித்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்து திருவான்மியூர் போலீஸாரும் முகிலன் வீடு சென்று விசாரித்தனர். அப்போது, குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததது.

இதற்கிடையில் தீ விபத்து குறித்து அறிந்த முகிலன், தனது வீட்டுக்கு தனது நண்பர்களை அனுப்பி பீரோவில் உள்ள தங்க நகைகளை எடுத்து பத்திரமாக வைக்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, நண்பர்கள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 147 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த முகிலன் நேற்று முன்தினம் சென்னை வந்துநகை காணாமல் போனது குறித்துஅடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தீ விபத்து ஏற்படுவற்கு முன்னரே பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiU2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTMxMzA4LWZpcmUtYWNjaWRlbnQtaW4tYWR5YXItY2hlbm5haS5odG1s0gEA?oc=5