சென்னை பல்கலை., தேர்வு முடிவு ஜன.23ல் வெளியீடு | Madras University, Exam Result Released on 23rd … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இளங்கோவன் வெள்ளைச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாத பருவத்தில் எம்சிஏ, எம்.எஸ்சி உள்ளிட்ட அனைத்து முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் ஜன.23-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZ2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9lZHVjYXRpb24vOTMxOTM0LW1hZHJhcy11bml2ZXJzaXR5LWV4YW0tcmVzdWx0LXJlbGVhc2VkLW9uLTIzcmQtamFuLmh0bWzSAQA?oc=5