சென்னை: போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தும் கும்பல் – இளைஞர்கள் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மகேஷ், பிரவின்குமார் ஆகியோர் ஆன்லைன் மூலம் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அந்த மாத்திரைகளை இரண்டு மடங்கு விலைக்கு போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் விற்று வந்திருக்கிறார்கள். அதன்மூலம் அதிகளவில் வருமானம் கிடைத்ததால் இவர்கள் இருவரும் தொடர்ந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விற்று வந்திருக்கிறார்கள். இந்த மாத்திரைகளை ஊசி மூலமாகவும் ஏற்றுவதற்காக இவர்கள் இருவரும் ஊசிகளையும் வைத்திருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குப் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

பிரவின்குமார்

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “போதைக்கு அடிமையாகும் இளைஞர்களில் சிலர் உடல் வலி நிவாரண மாத்திரைகள், குழந்தை பேறு சமயத்தில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது உடலில் உள்ள பாகங்களில் பாதிப்பு ஏற்படும். டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் யாரும் மாத்திரைகளை உபயோகப்படுத்தக்கூடாது. ஊசி மூலம் இதுபோன்ற மாத்திரைகளை உடலில் ஏற்றிக் கொள்ளும்போது குறுகிய காலத்தில் இளைஞர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகள் என எந்த மாத்திரைகளையும் பயன்படுத்தக்கூடாது” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWGh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvYm9keS1wYWluLXRhYmxldHMtYXMtZHJ1Z3MteW91dGhzLWFycmVzdGVkLWluLWNoZW5uYWnSAWJodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9ib2R5LXBhaW4tdGFibGV0cy1hcy1kcnVncy15b3V0aHMtYXJyZXN0ZWQtaW4tY2hlbm5haQ?oc=5