ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெண் வேட்பாளர்… சீமான் அதிரடி அறிவிப்பு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார். தேர்தலில் பெண் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் எனவும் அதில் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் எனவும் சீமான் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL25hYW0tdGFtaWxhci1wYXJ0eS1jaGllZi1zZWVtYW4tdG8tZmllbGQtZmVtYWxlLWNhbmRpZGF0ZS1pbi1lcm9kZS1lYXN0LWJ5cG9sbHMtODc2OTU2Lmh0bWzSAYUBaHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2NoZW5uYWkvbmFhbS10YW1pbGFyLXBhcnR5LWNoaWVmLXNlZW1hbi10by1maWVsZC1mZW1hbGUtY2FuZGlkYXRlLWluLWVyb2RlLWVhc3QtYnlwb2xscy04NzY5NTYuaHRtbA?oc=5