சென்னை கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப்பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை கிண்டியில் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

பின்னர், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது கட்டுமானப்பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiggFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvdGhlLWNoaWVmLW1pbmlzdGVyLXZpc2l0ZWQtdGhlLWNvbnN0cnVjdGlvbi13b3Jrcy1vZi1raW5ncy1wYW5ub2t1LWhvc3BpdGFsLWNoZW5uYWktODgzNjA20gGGAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvdGhlLWNoaWVmLW1pbmlzdGVyLXZpc2l0ZWQtdGhlLWNvbnN0cnVjdGlvbi13b3Jrcy1vZi1raW5ncy1wYW5ub2t1LWhvc3BpdGFsLWNoZW5uYWktODgzNjA2?oc=5