சென்னை மாவட்ட வாள்வீச்சு போட்டி – இன்று நடக்கிறது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரியில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட சீனியர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான மாவட்ட வாள்வீச்சு போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க தலைவர் எஸ்.தனசேகரன், வி.கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vU3BvcnRzL090aGVyU3BvcnRzL2NoZW5uYWktZGlzdHJpY3QtZmVuY2luZy1jb21wZXRpdGlvbi10by1iZS1oZWxkLXRvZGF5LTg4MzM5N9IBcGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL1Nwb3J0cy9PdGhlclNwb3J0cy9jaGVubmFpLWRpc3RyaWN0LWZlbmNpbmctY29tcGV0aXRpb24tdG8tYmUtaGVsZC10b2RheS04ODMzOTc?oc=5