46வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: விற்பனை எப்படி? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் புத்தகங்களை வாங்க ஏராளமான புத்தகப்பிரியர்கள் குவிந்தனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த 6 ஆம் தேதி 46ஆவது புத்தகக் காட்சி தொடங்கியது. 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பல்வேறு போட்டித் தேர்வர்களுக்கு தயாராகும் இளைஞர்கள் இப்புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்து தங்களுக்கு பயனுள்ள புத்தகங்களை வாங்கி சென்றனர்.

ஒவ்வொரு நாளும் முன்னணி எழுத்தாளர்கள் அரங்கில் அமர்ந்து புத்தகங்களில் கையெழுத்திட்டு வாசகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் இன்றுடன் புத்தக காட்சி நிறைவடைந்தது. கடந்த காலங்களை விட இந்த ஆண்டு புத்தகங்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு விற்பனை சுமார்  10 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு சுமார் 16 கோடியாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தனர்.

சிறைக்கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக பெற ‘கூண்டுக்குள் வானம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL3RhbWlsLW5hZHUvYmFwYXNpLWNoZW5uYWktNDZ0aC1ib29rLWZhaXItZW5kcy10b2RheS04NzY5MjMuaHRtbNIBYWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy90YW1pbC1uYWR1L2JhcGFzaS1jaGVubmFpLTQ2dGgtYm9vay1mYWlyLWVuZHMtdG9kYXktODc2OTIzLmh0bWw?oc=5