ஜப்தி வீட்டில் துப்பாக்கி, தோட்டா சென்னை தம்பதிக்கு வலை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சென்னையில், வங்கி கடனுக்காக வீட்டை ‘ஜப்தி’ செய்ய முயன்ற வீட்டில் இருந்து 12 தோட்டாக்களுடன், இரண்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரிக்கும் போலீசார் தலைமறைவாக உள்ள தம்பதியை தேடி வருகின்றனர்.

சென்னை, அண்ணா நகர், ‘இ – பிளாக்’கில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வினிதா குப்தா, 38. இவரது கணவர் சஞ்சய் குப்தா, 40; தொழிலதிபர்.

இவர்கள், அண்ணாநகர், 3வது அவென்யூவில் உள்ள, ‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் தன் வீட்டின் மீது, 53 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடன் தொகையை சரிவர செலுத்தவில்லை. இதனால், வட்டியுடன் 93 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, வங்கி அதிகாரிகள் கடந்த டிச., 1ம் தேதி, வினிதா குப்தா வீட்டுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். ‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டை நேற்று மாலை வங்கி அதிகாரிகள் திறந்து, ‘ஜப்தி’ செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது, படுக்கை அறையில், இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், இது குறித்து அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர்களான தம்பதி குறித்தும், துப்பாக்கி குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

‘ஜப்தி’ செய்ய முயன்ற வீட்டில், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

image

Dinamalar iPaper


மகளிடம் சில்மிஷம் தந்தைக்கு ‘ஆயுள்’

முந்தய


தங்கத்துல தரோமுன்னாங்க… பித்தளையில தந்தாங்க லட்ச ரூபா பரிசுன்னாங்க; மாணவிகளின் குமுறல்

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjUwMDjSAQA?oc=5