கடந்த ஆண்டு ரூ.95 கோடி சொத்துகளை மீட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் ரூ.95.85 கோடி சொத்துகளை மீட்டு, பாதிக்கப்பட்டவா்களிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள், சீட்டு மோசடி, கந்துவட்டி, ஆவண மோசடிகள், நில அபகரிப்பு, மரபுசாா் குற்றங்கள், சைபா் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரித்து, வழக்குப் பதிவு செய்கிறது.

கடந்த ஆண்டு இந்தக் குற்றங்கள் தொடா்பாக வந்த புகாா்களின் அடிப்படையில் மொத்தம் 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல், நிலுவையில் இருந்த 1,058 வழக்குகளின் புலன் விசாரணை முடிக்கப்பட்டன. 97 வழக்குகளில் நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமறைவாக இருக்கும் 65 குற்றவாளிகள் தேடப்படுவோா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு பல்வேறு புகாா்கள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 7,096 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 6,591 மனுக்கள் மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.95,85,49,715 சொத்துகள் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் நில அபகரிப்பு, மோசடி வழக்குகளில் மட்டும் மொத்தம் ரூ.81.98 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi0ARodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI2LyVFMCVBRSU5NSVFMCVBRSU5RiVFMCVBRSVBOCVFMCVBRiU4RCVFMCVBRSVBNC0lRTAlQUUlODYlRTAlQUUlQTMlRTAlQUYlOEQlRTAlQUUlOUYlRTAlQUYlODEtJUUwJUFFJUIwJUUwJUFGJTgyOTUtJUUwJUFFJTk1JUUwJUFGJThCJUUwJUFFJTlGJUUwJUFFJUJGLSVFMCVBRSU5QSVFMCVBRiU4QSVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4OC0lRTAlQUUlQUUlRTAlQUYlODAlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUYtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSVBRSVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRi0lRTAlQUUlOTUlRTAlQUYlODElRTAlQUUlQjElRTAlQUYlOEQlRTAlQUUlQjElRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQkYlRTAlQUUlQjAlRTAlQUUlQkYlRTAlQUUlQjUlRTAlQUYlODEtMzk5MDI0OS5odG1s0gHNBGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI2LyVFMCVBRSU5NSVFMCVBRSU5RiVFMCVBRSVBOCVFMCVBRiU4RCVFMCVBRSVBNC0lRTAlQUUlODYlRTAlQUUlQTMlRTAlQUYlOEQlRTAlQUUlOUYlRTAlQUYlODEtJUUwJUFFJUIwJUUwJUFGJTgyOTUtJUUwJUFFJTk1JUUwJUFGJThCJUUwJUFFJTlGJUUwJUFFJUJGLSVFMCVBRSU5QSVFMCVBRiU4QSVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4OC0lRTAlQUUlQUUlRTAlQUYlODAlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUYtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSVBRSVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRi0lRTAlQUUlOTUlRTAlQUYlODElRTAlQUUlQjElRTAlQUYlOEQlRTAlQUUlQjElRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQkYlRTAlQUUlQjAlRTAlQUUlQkYlRTAlQUUlQjUlRTAlQUYlODEtMzk5MDI0OS5hbXA?oc=5