“கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளங்களை…” – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத் துறை அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்குவதற்கும், கணினிமயமாக்கவும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

கோவில்களை நிர்வகிப்பதற்காக, மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப்ரவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvaGluZHUtcmVsaWdpb3VzLWFuZC1jaGFyaXRhYmxlLWVuZG93bWVudHMtZGVwYXJ0bWVudC1jaGVubmFpLWhpZ2gtY291cnQtMTYzOTY10gF4aHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvaGluZHUtcmVsaWdpb3VzLWFuZC1jaGFyaXRhYmxlLWVuZG93bWVudHMtZGVwYXJ0bWVudC1jaGVubmFpLWhpZ2gtY291cnQtMTYzOTY1?oc=5