சென்னை: பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை பார்த்த இளம் கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை தொலைபேசியில் பார்த்த 21 வயதான சிபிஎம் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் 20 கட்சி உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டார்.

2002ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்தபோது மிகப்பெரிய கலவரம் மூண்டது. இதில் மிகப்பெரிய அளவில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தியதாகக் கூறி பிரபல செய்தி நிறுவனம் பிபிசி India: The Modi Question என்ற பெயரில் ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் கலவரத்திற்கு மோடிதான் காரணம் என குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அதனை வெளியிட தடை விதித்திருக்கிறது.

திரையிட அனுமதி மறுப்பு.. செல்போனில் பார்த்த DYFI அமைப்பினர்

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிபிசி-இன் ஆவணப்படத்தை சென்னையில் 21 வயதான சிபிஎம் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் 20 கட்சி உறுப்பினர்கள் தங்கள் செல்போனில் பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். DYFI என்று அழைக்கப்படுகிற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முதலில் மத்திய சென்னை அண்ணா நகர் அம்பேத்கர் சிலையின் கீழ் திரையிட முயன்றதாக தெரிகிறது. ஆனால் போலீசார் திரையிட அனுமதிக்காததால், ஆவணப்படத்தை தங்கள் தொலைபேசியில் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் போலீசாரால் கைதும் செய்யப்பட்டனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கவுன்சிலர் உட்பட 20 பேர் மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய சென்னை அண்ணா நகர் அம்பேத்கர் சிலையின் கீழ் உட்கார்ந்து குஜராத் கலவரம் குறித்த BBC யின் ஆவணப்படத்தை பார்த்த #DYFI தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #BBCDocumentary #gujaratriots #themodiquestion #DYFITamilNadu pic.twitter.com/0K2srYeBWj
— DYFI Tamil Nadu (@DyfiNadu) January 26, 2023

தமிழ்நாட்டில் முதன்முதலாக பிரதமர் மோடிக்கு எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிற பிபிசியின் ஆவணப்படத்தினை பார்த்து போராட்டத்தினை துவக்கி வைத்துள்ளது DYFI அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

image

புதுச்சேரியில்..

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட INDIA THE MODI QUESTION என்ற பெயரில் பிரதமர் மோடி பற்றிய குறும்படம் திரையிடப்படும் என எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பு அறிவித்தது. அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததால், மாணவர்கள் தனித்தனியாக குறும்படத்தை பதிவிறக்கம் செய்து வளாகத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கும் எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருமாவளவன் கருத்து..

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் இருப்பதால், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறை, வெறியாட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவி அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது, தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்.

எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார் வன்முறையை தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கிறது பிபிசியையும்அவர்கள் அச்சுறுத்தி இருக்கிறார்கள் இத்தகைய நிலையில் இந்திய அளவிலே ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்கிற கருத்தை அவர்கள் மீண்டும் முயற்சிக்கின்றனர், இது வெறும் இஸ்லாமியர் கருத்து அவர்களுக்கு எதிரான அரசியலாக மட்டும் முடியாது பிற மொழி பேசக்கூடிய மக்களுக்கு எதிரான அரசியலாகவும் முடியும்” என்று கூறியிருந்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vd3d3LnB1dGhpeWF0aGFsYWltdXJhaS5jb20vbmV3c3ZpZXcvMTU0NTc2L0NQSU0tWW91bmctY291bnNlbGxvci1hcnJlc3RlZC1mb3Itd2F0Y2hpbmctSW5kaWEtVGhlLU1vZGktUXVlc3Rpb27SAXlodHRwczovL3d3dy5wdXRoaXlhdGhhbGFpbXVyYWkuY29tL2FtcC9hcnRpY2xlLzE1NDU3Ni9DUElNLVlvdW5nLWNvdW5zZWxsb3ItYXJyZXN0ZWQtZm9yLXdhdGNoaW5nLUluZGlhLVRoZS1Nb2RpLVF1ZXN0aW9u?oc=5