சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும் என அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை பாட வேளையைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9hbm5vdW5jZW1lbnQtdGhhdC1hbGwtc2Nob29scy1pbi1jaGVubmFpLXdpbGwtZnVuY3Rpb24tdG9tb3Jyb3ctODg3MTQz0gFyaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9hbm5vdW5jZW1lbnQtdGhhdC1hbGwtc2Nob29scy1pbi1jaGVubmFpLXdpbGwtZnVuY3Rpb24tdG9tb3Jyb3ctODg3MTQz?oc=5