சென்னை: கோவில் குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தொழிலாளி பலி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள கோவில் குளத்தை தூர்வாரும் பணியில் 2 தொழிலார்கள் ஈடுபட்டனர். அப்போது நாராயணன் என்பவர் குளத்தின் சேற்றில் சிக்கி மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சகதொழிலாளி மற்றும் பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தொழிலாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியில் தொழிலா நாராயணன் சேற்றி சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடம்வந்து விசாரணை நடத்தினர். பின்னர், உயிரிழந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLXdvcmtlci1kaWVzLWFmdGVyLWdldHRpbmctc3R1Y2staW4tbXVkLXdoaWxlLWRpZ2dpbmctdGVtcGxlLXBvbmQtODg3ODg30gF7aHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLXdvcmtlci1kaWVzLWFmdGVyLWdldHRpbmctc3R1Y2staW4tbXVkLXdoaWxlLWRpZ2dpbmctdGVtcGxlLXBvbmQtODg3ODg3?oc=5