சென்னை பல்கலைக்கழக நிதி நெருக்கடி: துணைவேந்தர் கேள்விக்கு அமைச்சர் பி.டி.ஆர் அதிரடி பதில் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

நிதி தொடர்பான கோரிக்கைகளுக்கு சரியான விளக்கங்கள் இருந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீள்வதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதி தொடர்பான கோரிக்கைகள் வந்தால் பல வகையான கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியான விளக்கங்கள் இருந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என அதிரடியாக பதிலளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidGh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L3B0ci1wYWxhbml2ZWwtdGhpYWdhcmFqYW4tc2F5cy1hYm91dC1tYWRyYXMtdW5pdmVyc2l0eS1mdW5kLWNyaXNpcy01ODM4MzMv0gF5aHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUvcHRyLXBhbGFuaXZlbC10aGlhZ2FyYWphbi1zYXlzLWFib3V0LW1hZHJhcy11bml2ZXJzaXR5LWZ1bmQtY3Jpc2lzLTU4MzgzMy9saXRlLw?oc=5