சென்னை கடற்கரையில் ஒதுங்கும் ஆமைகள்; கடித்துக் குதறும் நாய்கள்: கண்டுக் கொள்ளாத … – Kamadenu

சென்னைச் செய்திகள்

கிழக்கு கடற்கரைக்கு ஆமைகள் முட்டையிடுவதற்கு வருவது இயல்பான ஒன்று. சென்னையில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளும் முறையாக கழிவுகள் அகற்றி பராமரிக்கப்படும் நிலையில், சென்னையை அடுத்துள்ள கடற்கரைகள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன. ஆமைகள் கரையில் இறந்து கிடக்கின்றன.

ஆமைகள் இறப்பு மிக பெரிய சூழலியல் பிரச்சினை என்பதால் அவற்றின் உயிர் இழப்பிற்கான காரணம் என்னவென்று இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. முட்டையிடுவதற்காக கடற்கரை நோக்கி வரும் ஆமைகள் மீனவர்களின் சுருக்குமடி வலைகள் காரணமாகும் இறந்து கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது.

இதுவரை மாவட்ட நிர்வாகமோ அல்லது கடல்சார் உயிரின பாதுகாப்பு குழுமமோ எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWGh0dHBzOi8va2FtYWRlbnUuaGluZHV0YW1pbC5pbi9uYXRpb25hbC90dXJ0bGVzLWFyZS1seWluZy1kZWFkLW9uLXRoZS1jaGVubmFpLWVhc3QtY29hc3TSAQA?oc=5