சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து விபத்து – சிறுமி உயிரிழப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயம் அடைந்தார்.

காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigQFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL25ld3Mvc3RhdGUvY2hlbm5haS1hbi1pcm9uLWdhdGUtb2YtYS1jbG90aGVzLXNob3AtaW4ta2lscGFra2FtLWFyZWEtZmVsbC1kb3duLWFuZC1hLWdpcmwtZGllZC04ODg0MTTSAYUBaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLWFuLWlyb24tZ2F0ZS1vZi1hLWNsb3RoZXMtc2hvcC1pbi1raWxwYWtrYW0tYXJlYS1mZWxsLWRvd24tYW5kLWEtZ2lybC1kaWVkLTg4ODQxNA?oc=5