ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் – சென்னை இடையே ரயில் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

ஓசூர்: ஒன்றிய பட்ஜெட்டில் நீண்ட நாள் கோரிக்கையான ஓசூர்- சென்னை இடையிலான ரயில் பாதை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று அப்பகுதியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தொழில் நகரமாக உருவெடுத்துள்ள ஓசூர் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரயில் விட வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதற்கட்டமாக ஆய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுகின்றனர். அதே போல் பெங்களூரு – ஓசூர் வழியாக சேலத்திற்கு பகல் நேரத்தில் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும். ஓசூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzQ1NjHSAQA?oc=5