ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை முதல் பிப். 2ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தங்குமிடம், பயணம் செய்யும் வழித்தடம் ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MzQ1NjbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNDU2Ni9hbXA?oc=5