ஜி-20 கருத்தரங்கம் சென்னையில் நாளை துவக்கம் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஜி – 20′ அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம், சென்னையில் நாளை(ஜன.,31) துவங்குகிறது. இதில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள, 20 நாடுகள் மட்டுமின்றி, ஒன்பது நட்புறவு நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

உலக பொருளாதாரத்தில் உள்ள முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ‘ஜி — 20’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் உள்ளன.

இந்த அமைப்பின், 2022 – 23ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து, நாடு முழுதும், 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து, கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் நாளை முதல், பிப்., 2 வரை, மூன்று நாட்களுக்கு கல்வி துறை சார்ந்த கருத்தரங்கம், ஜி – 20 அமைப்பின் கல்வி பிரிவு தலைவர் சைதன்யா பிரசாத், மத்திய கல்வித் துறை இணை செயலர் நீட்டா பிரசாத் தலைமையில் நடக்கிறது.

கல்வித் துறை சார்பில், சென்னை ஐ.ஐ.டி.,யில், 31ம் தேதி; நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில், பிப்., 1, 2ம் தேதிகளிலும்கருத்தரங்கம் நடக்கின்றன.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, ‘ஜி — 20’ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஒன்பது நட்புறவு நாடுகளின் பிரதிநிதிகளும் சென்னை வரத் துவங்கி உள்ளனர்.

அவர்களை வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்ளே ரங்கோலி கோலம் போடப்பட்டு, ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற வாசகங்கள்அடங்கிய பேனரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், புகைப்படங்களால் அழகு படுத்தப்பட்டு உள்ளன. விமான முனையங்களின் வெளியேறும் வாயில்களில், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

ஜி — 20 கருத்தரங்கிற்கு வரும் பிரதிநிதிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியே வர, தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதிநிதிகள் வருகை

புதுச்சேரியில் இன்று துவங்கும் ‘ஜி – 20’ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க, உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் வந்தனர்.

ஜி – 20 அமைப்பின் இரண்டு நாள் மாநாடு, புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று துவங்குகிறது.இம்மாநாட்டில் பங்கேற்க ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரிக்கு நேற்று மதியம் வந்தனர்.வெளிநாட்டு பிரதிநிதிகளை, லாஸ்பேட்டை விமான நிலையத்தில், தலைமைச் செயலர் ராஜிவ்வர்மா, கலெக்டர் வல்லவன் வரவேற்றனர்.

ஜி – 20 மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பு, நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பாதுகாப்பிற்கு, சீனியர் எஸ்.பி., தீபிகா மேற்பார்வையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பிரதிநிதிகள் தங்கியுள்ள இடங்கள், மாநாடு நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி, புதுச்சேரி நகர் பகுதி முழுதும் போலீசாரின் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

image

Dinamalar iPaper


கொள்ளையடித்த பணம்: அன்புமணி விளாசல்!

முந்தய


சென்னையை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவார் முதல்வர்!

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjkxODbSAQA?oc=5