சுதாசந்தருடன் வந்த இளம்பெண்ணிடம் முதலில் போலீஸார் விசாரித்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “சுதாசந்தருடன் பைக்கில் வந்த இளம்பெண் ஆவடி பகுதியைச் சேர்ந்தவர். சுதாசந்தரும், அந்தப் பெண்ணும் ஒரே பள்ளியில் படித்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதை தெரிந்த பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக அவரை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன்பிறகும் இளம்பெண்ணுக்கும், சுதாசந்தருக்கும் இடையே பழக்கம் நீடித்திருக்கிறது. அதனால் கணவரைப் பிரிந்த இளம்பெண், சுதாசந்தருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பிறகே சுதாசந்தர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அதனால் பெண் குடும்பத்தினருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் கொலை நடந்தபோது அங்கு வந்தவர்கள் குறித்த தகவலை இளம்பெண் எங்களிடம் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையிலும் கொலையாளிகளைத் தேடிவருகிறோம்” என்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUveW91dGgtbXVyZGVyZWQtaW4tY2hlbm5haS1wb2xpY2UtaW52ZXN0aWdhdGlvbi1nb2VzLW9u0gFjaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUveW91dGgtbXVyZGVyZWQtaW4tY2hlbm5haS1wb2xpY2UtaW52ZXN0aWdhdGlvbi1nb2VzLW9u?oc=5