மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: சென்னை மாவட்ட மகளிர் … – Kamadenu

சென்னைச் செய்திகள்

படுகாயமடைந்த லட்சுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் கொலை வழக்குப்பதிந்து, ஜீவமணியை கைது செய்தனர்.

சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.எச்.முஹமது பாருக் முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஜீவமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையில் தலா ரூ.4 ஆயிரத்தை லட்சுமியின் 2 மகன்களுக்கும் வழங்க உத்தரவிட்டார். தாயை இழந்த இருவருக்கும் தமிழக அரசிடமிருந்து கூடுதல் இழப்பீடு தொகை பெற்று தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihgFodHRwczovL2thbWFkZW51LmhpbmR1dGFtaWwuaW4vbmF0aW9uYWwvbGlmZS1pbXByaXNvbm1lbnQtZm9yLWh1c2JhbmQtYnVybnQtaGlzLXdpZmUtYnktcG91cmluZy1rZXJvc2VuZS1jaGVubmFpLWRpc3RyaWN0LXdvbWVucy1jb3VydNIBAA?oc=5