சென்னையில் புனர்வாழ்வு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் 28 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கே.கே நகரில் 28 கோடி ரூபாய் செலவில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையின் புதிய ஒப்புயர்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

அதனைதொடர்ந்து, ஒப்புயர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் சிகிச்சை வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கிய முதலமைச்சர், செயற்கை உபகரணங்கள் கட்டணமின்றி பெறுவதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMioQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL2NoaWVmLW1pbmlzdGVyLW0tay1zdGFsaW4taW5hdWd1cmF0ZWQtdGhlLWNlbnRyZS1vZi1yZWhhYmlsaXRhdGlvbi1mb3ItZGlmZmVyZW50bHlhYmxlZC1hdC1ray1uYWdhci1vbi1zYXR1cmRheS04ODA5MTcuaHRtbNIBpQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9jaGllZi1taW5pc3Rlci1tLWstc3RhbGluLWluYXVndXJhdGVkLXRoZS1jZW50cmUtb2YtcmVoYWJpbGl0YXRpb24tZm9yLWRpZmZlcmVudGx5YWJsZWQtYXQta2stbmFnYXItb24tc2F0dXJkYXktODgwOTE3Lmh0bWw?oc=5