ராமநாதபுரம் – சென்னை விமான சேவை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் – வெப்துனியா

சென்னைச் செய்திகள்

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் விமான துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இருப்பதால் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

 

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமான தளத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

மக்களவை இது குறித்து நவாஸ் கனி எம்பி கேள்வி எழுப்பியபோது ராமநாதபுரத்தில் விமான நிலையம் தயாராகி வருகிறது என்றும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ராமநாதபுரம் – சென்னை விமான சேவைக்கு அரசால் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராமநாதபுரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Mahendran

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibWh0dHBzOi8vdGFtaWwud2ViZHVuaWEuY29tL2FydGljbGUvcmVnaW9uYWwtdGFtaWwtbmV3cy9yYW1hbmF0aGFwdXJhbS1jaGVubmFpLWZsaWdodC1zb29uLTEyMzAyMDIwMDA1NF8xLmh0bWzSAQA?oc=5