சென்னை: `தங்கை இப்படி வாழ்வது அவமானமாக இருந்தது’ – கொலை வழக்கில் கைதான அண்ணன் `பகீர்’ தகவல்! – Vikatan

சென்னை, புழல் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதா சந்தரும் அவருக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவரும், கடந்த 31.1.2023-ம் தேதி பைக்கில் விநாயகபுரம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இறங்கிய சிலர், கண்இமைக்கும் நேரத்தில் சுதாசந்தரை வெட்டிச் சாய்த்து விட்டு தப்பி ஓடினர். இந்தச் சம்பவத்தை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக புழல் காவல் நிலையத்துக்கு தகவல் […]

Continue Reading

Chennai high court: சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி… அடுத்தது…? – Tamil Hindustan Times

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். எனவே, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது மதுரை […]

Continue Reading

சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதி… – News18 தமிழ்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க எட்டு பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு […]

Continue Reading

ராமநாதபுரம் – சென்னை விமான சேவை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் – வெப்துனியா

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் விமான துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இருப்பதால் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமான தளத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என விமான […]

Continue Reading

சென்னை – ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை – தினகரன்

சென்னை: சென்னை – ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. உதான் திட்டத்தில் தேவைக்கேற்ப நகரங்களை இணைக்கக் கூடிய வகையில் விமான சேவை நடந்துவருகிறது என அரசு தகவல் தெரிவித்துள்ளது. Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzU1NjbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNTU2Ni9hbXA?oc=5

Continue Reading

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் – சென்னை… – தினத் தந்தி

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க […]

Continue Reading

சென்னை: திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்; சிறைக்குச் சென்ற இளைஞர் – என்ன நடந்தது? – Vikatan

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (38) (பெயர் மாற்றம்). இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கவிதாவுக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது யுவராஜ், கவிதாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் யுவராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதா கூறியிருக்கிறார். அதற்கு யுவராஜ், திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். அதனால் இருவருக்கும் […]

Continue Reading

இந்தியாவின் முதல் மல்டிபிளக்ஸ்: சென்னை விமான நிலையத்தில் நியூ அப்டேட் – Indian Express Tamil

இந்தியாவில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர்.,இன் திரையரங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புது வசதி, சென்னை விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1,155 பார்வையாளர்களை உள்ளடக்கும் அளவிற்கு கட்டப்பட்டிருக்கும் இந்த திரையரங்கில், 2K RGB+ லேசர் ப்ரொஜெக்டர்கள், ரேஸர் ஷார்ப், அல்ட்ரா-ப்ரைட் படங்கள் மற்றும் மேம்பட்ட டால்பி அட்மாஸ் உயர் வரையறை அதிவேக ஆடியோவுக்கான REAL D 3D டிஜிட்டல் ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்ஷன் உள்ளிட்ட அதிநவீன சினிமா தொழில்நுட்பங்கள் […]

Continue Reading

SSC; மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் அழைப்பு – Indian Express Tamil

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் பன்முகப் பணியாளர் (Multi-Tasking Staff) தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்படும் என சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை […]

Continue Reading

சொத்து கிடைக்காததால் ஆத்திரம்.. சகோதரி காரை திருடி சென்ற ஐடி ஊழியர் கைது – News18 தமிழ்

சென்னை  ஐடி ஊழியர் ஒருவர் குடும்ப சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் சொந்த சகோதரியின் காரை கடத்தி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர் சொந்தமாக தண்ணீர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி காரை காணவில்லை என சிடலப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தேன்மொழி வீடு […]

Continue Reading