குட் நியூஸ்.. இனி சும்மா ஜிவ்வுன்னு பறக்கலாம்.. சென்னை-பெங்களூர் விரைவு சாலை பணி ஏப்ரலில் தொடங்கும்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் ஏப்ரலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான சாலை மேம்பாட்டு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

7 சாமி சிலைகளை விற்க முயன்ற பாஜக ராமநாதபுரம் நிர்வாகி உட்பட 4 பேர் அதிரடி கைது- கட்சி பதவி பறிப்பு!7 சாமி சிலைகளை விற்க முயன்ற பாஜக ராமநாதபுரம் நிர்வாகி உட்பட 4 பேர் அதிரடி கைது- கட்சி பதவி பறிப்பு!

இதன்படி பெங்களூர்- சென்னை இடையே 240 கி.மீ.,க்கு விரைவுச்சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம், ஒசகோட்டாவில் துவங்க உள்ள இந்த விரைவுச்சாலை ஆந்திராவின் சித்துார் மாவட்டம் வழியாக, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருகாட்டுகோட்டையில் முடியும் வகையில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை

தொழில் நகரமாக விளங்கும் சென்னை மற்றும் பெங்களூருக்கு இந்த விரைவுச் சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் வாகனங்கள் மணிக்கு, 120 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் என்றும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொழில் வளர்ச்சி அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் ஏப்ரலில் தொடங்கும்

தமிழகத்தில் வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, 106 கி.மீ.,க்கு இச்சாலை அமைய உள்ளது. மூன்றாம் கட்ட சாலைப்பணிக்கு மட்டும் மத்திய அரசு ஏற்கனவே 3,472 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் ஏப்ரலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிசக்தி மாஸ்டர் திட்டத்தின் கீழ் சேர்ப்பு

மத்திய அரசின் கதிசக்தி மாஸ்டர் திட்டத்தின் சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் சேர்ககப்படுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த சாலை பணிகளுக்காக தமிழ்நாடு வழியாக இயங்கும் நான்கு பேக்கேஜ்களுக்கும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் நான்கு வழிச்சாலை, அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலை அமைக்கும் பணி ஏப்ரல்-மே மாதத்திற்குள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டமைப்பு வசதி

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ₹1,200 கோடியில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்… இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Work on the Chennai-Bangalore expressway is scheduled to begin in April. It is said that this expressway will be very useful for the industrial cities of Chennai and Bangalore

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-bengaluru-expressway-work-begin-in-april-447615.html