எகிறுது! சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் வீடுவிலை கிடுகிடு உயர்வு – Asianet News Tamil

New Delhi, First Published Feb 28, 2022, 4:25 PM IST சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 8 முக்கியநகரங்களில் வீட்டின் விலை 3 % முதல் 7%வரை அதிகரி்த்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிமெண்ட், உருக்கு உள்ளிட்ட உள்ளீட்டுப்பொருட்களின் விலை உயர்ந்ததால், வீடுகளின்விலையும் உயர்ந்துள்ளது. “ரியல் இன்சைட் ரெசிடென்சியல்-ஆண்டு அறிக்கை2021” என்ற தலைப்பில் பிராப் டைகர்.காம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2021ம் ஆண்டு வீடுகளின் விற்பனை 13 சதவீதம் […]

Continue Reading

சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமி: சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியது – தினத் தந்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பதிவு: பிப்ரவரி 28,  2022 03:20 AM சென்னை,  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் அருகே வாழப்பாடியிலும் ‘சூப்பர் கிங்ஸ்’ என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி நேற்று தொடங்கப்பட்டது. இதில் இணைய விரும்பும் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் […]

Continue Reading

சென்னை மாநகராட்சி! – தினமணி

கோப்புப்படம் இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான மாநகராட்சி சென்னை மாநகராட்சிதான். 1688 }ஆம் ஆண்டு செப்டம்பர் 29}ஆம் தேதி உருவானது. தொடக்கத்தில் மாநகராட்சி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் இயங்கி வந்தது. பின்னர் சில காலம் சென்னை எர்ரபாலு செட்டித் தெருவில் இயங்கி வந்தது. அதற்குப் பின்பு ரிப்பன் பிரபு ஆட்சியின் போதுதான் தற்போது இயங்கி வரும் இடத்தில் அதற்கென்று கட்டடம் கட்டப்பட்டது. எனவேதான் அதற்கு ரிப்பன் பில்டிங் எனப் பெயரிடப்பட்டது. தொடக்கத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து பத்து […]

Continue Reading

#BREAKING || உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர் ! | #ThanthiTv – தந்தி டிவி

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் இன்று சென்னை வந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்க உள்ளார். மேலும் பெற்றோர்களும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 5 மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவர்களை வரவேற்றார். உக்ரைனில் இருந்து […]

Continue Reading