தமிழகத்தில் முதல் முறை.. ஒரு ஏரியா முழுக்க கருஞ்சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.. அதுவும் சென்னையில் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் அடிப்படையில், சென்னையின் ஒரு பகுதி, கரும் சிவப்பு மண்டலம் என்ற நிலைக்கு போயுள்ளது. சென்னையிலேயே இங்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

image

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவது ஏன்? விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னையில் 2,644 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று, 3043 ஆக அதிகரித்துள்ளது. அதாவது மொத்த தமிழக பாதிப்பான 6009 என்பதில், பாதிக்கும் மேல், சென்னை என்ற ஒரே மாவட்டத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

அதிலும், சில பகுதிகள்தான் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை சிவப்பு மண்டலப் பகுதி. அதில் ஒரு பகுதி கருஞ்சிவப்பு மண்டலப் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

imageவடசென்னையை ஓவர் டேக் செய்த தென் சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு.. 30 கர்ப்பிணிகளும் பாதிப்பு

கோடம்பாக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10வது மண்டலமாக உள்ளது, கோடம்பாக்கம். இங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. எனவே, சிவப்பு மண்டலமாக இருந்த இந்த பகுதி, கருஞ்சிவப்பு மண்டலத்துக்கு மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில், புதிதாக 122 பேருக்கு கோடம்பாக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி, 3,043 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 50 சதவீதம். நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இதுவரை இல்லாத வகையில் 399 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பேட்டியின்போது தெரிவித்தார். பிறகு பிரஸ் ரிலீஸ் வெளியிடப்பட்டது.

மாறி மாறி பகுதிகள்

முதலில் ராயபுரம்.. பிறகு திருவிகநகர்.. ஆகிய பகுதிகள் அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மண்டலங்களாக அடுத்தடுத்து மாறின. ஆனால், இப்போது, இந்த நிலை கோடம்பாக்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு உள்ளேயே இப்படி நிலைமை இருப்பது அதிர்ச்சியின் உச்சம் என்றால் அது மிகையில்லை.

ராயபுரம், திருவிக நகர்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா நோயாளிகள் குறைவாக இருக்கும் மண்டலம் மணலிதான். ஆலந்தூரும் இந்த லிஸ்டில் உள்ளது. ஒன்று வடக்கு சென்னை என்றால் மற்றொன்று தென் சென்னை பகுதி. இங்கு தலா 19 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால், கோடம்பாக்கத்திற்கு அடுத்து, சென்னையில், அதிகபட்சமாக, ராயபுரத்தில் 490 நோயாளிகளும், திருவிக நகரில் 477 நோயாளிகளும் உள்ளனர். தேனாம்பேட்டையில் 343 நோயாளிகள் பதிவாகியுள்ளது. அண்ணாநகரில் 233 என்ற அளவில் பாதிப்பு உள்ளது.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,இன்றே பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/part-of-chennai-become-a-dark-red-zone-385003.html